புளியந்தோப்பு கே.பி.பூங்கா வீடுகளை 11 பேர் கொண்ட வல்லுநர் குழு 2 வாரத்தில் அறிக்கை அளிக்கும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் சமூகநலத்துறை மானிய கோரிக்கை  மீதான விவாதத்தில் வந்தவாசி அம்பேத்குமார் (திமுக) பேசியதாவது: புளியந்தோப்பில் பாதிக்கப்பட்ட கட்டிடத்தை இரண்டு அமைச்சர்கள் ஆய்வு செய்து, ஐஐடி ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளனர்.ஐஐடி சார்பில் ஆய்வு செய்தவர்களின் குழுவின் பெயர் என்ன? அந்த குழுவின் தலைவர் யார்? எப்போது ஆய்வு அறிக்கை கிடைக்கும்? என்று மக்கள் கோரிக்கையாக இருந்துள்ளது. அமைச்சர் தா.மோ.அன்பரசன்: புளியந்தோப்பு கே.பி. பூங்கா வீடுகளை யார் ஆய்வு செய்வது? அவர்களின் பெயர் விவரம் கேட்டுள்ளார். இந்திய தொழில்நுட்பத்தினுடைய (ஐஐடி) ஒரு அங்கமாக செயல்படும் கியூப் என்ற நிறுவனம் பத்மநாபன் தலைமையில் 11 பேர் கொண்ட வல்லுநர் குழு புளியந்தோப்பு கட்டிடங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. இன்னும் 2 வாரத்தில் அறிக்கை தருவதாக சொல்லி உள்ளனர்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories: