முதியவர்களை பராமரிக்க தலைமை செயலாளர் தலைமையில் கண்காணிப்பு குழு: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் முதியவர்கள் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 11.2 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதியவர்களை பராமரிக்கும் முதியோர் இல்லங்களுக்கு அரசு மானியங்கள் வழங்குவதோடு, முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் திட்டங்களை கண்காணிக்கவும் தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில உயர்மட்டக்குழு மற்றும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரத்த சோகையை குறைப்பு திட்டம்: கர்ப்பிணி பெண்களிடையே காணப்படும் ரத்தசோகையைக் குறைக்கும் பொருட்டு இருமுறை செறிவூட்டப்பட்ட உப்பு வழங்கும் திட்டம் சேலம், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டது. ரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட 10,120 கர்ப்பிணி பெண்கள் பயன் பெற்றார்கள். சேலம், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து பெறப்படும் கள ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் திட்டம் விரிவாக்கப்படும்.

Related Stories: