மாணவர்களுக்கு தடுப்பூசி போட மாவட்ட சுகாதார துணை இயக்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு

சென்னை: கல்லூரி  முதல்வர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட சுகாதார துணை  இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில், செப்டம்பர் 1ம்  தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்  தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே அந்தந்த கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க  வேண்டும். அதைப்போன்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை  இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு  மேலாகவும், தமிழகத்தில் 17 ஆண்டுகளுக்கு மேலாகவும் போலியோ நோய் இல்லாமல்  உள்ளது. ஆனால் அண்டை நாடுகளில் போலியோ நோய் உள்ளது. எனவே ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடல், சாலை, ரயில், விமானம் என எந்த மார்க்கத்தில்  இருந்து வந்தாலும் அவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி கட்டாயம் அளிக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: