சர்வதேச தரத்தில் வீரர்களை உருவாக்கிட விளையாட்டு துறையில் முதல்வர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு

சென்னை: தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேசிய விளையாட்டு தினம் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு  துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா, அர்ஜூனா விருது  பெற்ற நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் மற்றும் அரசு உயர் அலுவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, வீரர் - வீராங்கனைகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டத்தினை உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னோடியாக திகழ்ந்திட, சிறப்பான மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து, அதனை செயல்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி நடத்தி வருகிறார். குறிப்பாக, விளையாட்டிலும், உடல் ஆரோக்கியத்திலும், ஆர்வமும், அக்கறையும் கொண்ட முதல்வர், சர்வதேச தரத்தில் வீரர்களை உருவாக்கிட விளையாட்டு துறையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இவ்வாறு பேசினார்.

Related Stories: