தமிழகம் முழுவதும் ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற புதிய திட்டம்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திருவாடானை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கருமாணிக்கம் பேசும் போது, ‘ராமநாதபுரம் பெரிய கண்மாய் தூர்வாரி மராமத்து பணிகள் செய்து தர வேண்டும்’ என்றார். அதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘ஒரு காலத்தில் ஏரிகளில் பசுமை காடுகளை அமைக்க வேண்டும் என்று கருவேல மரங்களை நட்டு விட்டார்கள். அப்போதே நான் எதிர்த்தேன். இப்போது, அதன் விளைவு என்னவென்று கேட்டீர்கள் என்றால், கருவேல மரங்கள் பசுமையாகிறது மட்டுமல்ல, பயிர்களை நாசமாக்கி விடுகிறது.

அந்த மரத்தில் ஊறி, ஊறி வரும் தண்ணீர், நிலத்தில் பாய்ச்சினால் காலியாகி விடுகிறது. எனவே, நான் ரொம்ப திடமாக இருக்கிறேன். இருக்கின்ற கருவேல மரங்களை கொஞ்சம், கொஞ்சமாக அகற்றி ஆக வேண்டும். அதை ஒரு திட்டமாக எடுத்து செய்யலாம் என்று இருக்கிறேன்.  எனவே, அந்த பஞ்சாயத்துக்கள் கருவேல மரங்களை வெட்டி எடுத்து கொண்டு, அதில் உள்ள வருவாயை அவர்கள் எடுத்து கொண்டாலும் பரவாயில்லை. இடத்தை காலி பண்ணி கொடுத்தால் பரவாயில்லை என்று நினைக்கிறேன்’’ என்றார்.

Related Stories: