புதுக்கோட்டை மாவட்டத்தில் தொய்வின்றி காசநோய் ஒழிப்பு பணி-கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கிய கலெக்டர் கவிதா ராமு மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு பணி தொய்வின்றி நடைபெற்று வருவதாக கூறினார்.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பணியாளர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கிய கலெக்டர் ராமு நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வட்டாரத்திற்கு ஒருவர் வீதம் 13 (3 பணியாளர்கள் தவிர மீதம் 10 பணியாளர்கள் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்) முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, காசநோய் ஒழிப்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.

மேலும் கண்காணிப்பு பணிகள் மற்றும் தொடர் சிகிச்சைப் பணிகள், பன்மருந்து எதிர்ப்பு காசநோயாளிகள் சிகிச்சையும், தொடர் கண்காணிப்பு பணிகள் மற்றும் காசநோய் ஒழிப்புப் பணிகள் சார்ந்த களப்பணி மேற்கொள்வதற்கு புதிதாக பணியமர்த்தப்பட்ட 10 பணியாளர்களுக்கு ரூ.6,14,995 மதிப்பீட்டில் 10 எண்ணிக்கையிலான இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10 காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துகளும் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கவிதா ராமு, தெரிவித்தார்.​இந்நிகழ்ச்சியில் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ராமு, துணை இயக்குநர் (காசநோய்) மரு.முத்துபாண்டியன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Related Stories: