சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது டிவிட்டரில்: தேமுதிக நிறுவனரும், தமிழ் மக்களின் அன்புக்குரியவருமான நண்பர் விஜயகாந்த் நீண்ட நாட்கள் உடல் நலத்துடன், மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்த நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.