4 மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட 44 மருந்துகள் தரமற்றவை என ஆய்வில் உறுதி: மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 44 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 1,028 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் 983 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டது. அதேவேளையில்,  காய்ச்சல், தொண்டை அலர்ஜி, குடற்புழு நீக்கம், ஜீரண பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 44 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் https://cdsco.gov.in/ என்ற இணையதள பக்கத்தில்  வெளியிட்டுள்ளது.

Related Stories: