நிதி முறைகேடு, கிரிமினல் குற்றச்சாட்டு 243 எம்பி, எம்எல்ஏ.க்கள் மீது சிபிஐ, அமலாக்க துறை வழக்கு

புதுடெல்லி: எம்பி.க்கள் மீதான வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வக்கீல் விஜய் ஹன்சாரியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹன்சாரியா தாக்கல் செய்த அறிக்கையில், ‘எம்பி.க்கள் 51 பேர் மற்றும் எம்எல்ஏ.க்கள் உட்பட 112 பேர் மீதான நிதி மோசடி வழக்குகளை அமலாக்கத் துறையும், 121 முன்னாள், இன்னாள் எம்பி.க்கள், எம்எல்ஏ.,க்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளை சிபிஐ.யும் விசாரிக்கின்றன. எம்பிக்கள் மீதான நிதி மோசடி குறித்த 28 வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 10 வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நிலையில் உள்ளன. இந்த வழக்குகளை குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து விசாரணையை துரிதப்படுத்தலாம்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: