மேகதாது உள்ளிட்ட வேறு எந்த இடத்திலோ கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சிகளை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை: தமிழக அரசின் நீர்வளத்துறை மானியக்கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பதாவது: மேகதாதுவிலோ அல்லது வேறு எந்தவொரு இடத்திலோ, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில் அணையை கட்டுவதற்கான கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை தடுத்து நிறுத்திடவும்,  தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கவும் அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் காவிரி மற்றும் பெண்ணையாறு நதிகளில் கர்நாடகா சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை விடுவிப்பதால் மாசுப்பட்டுள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இரு மாநில எல்லைக்கருகில் காவிரி மற்றும் பெண்ணையாற்று நீரின் தரத்தினை தொடர்ந்து பரிசோதித்து கண்காணித்து வருகிறது. இதே ேபான்று மத்திய நீர்வள குழுமமும் பில்லிகுண்டுவில் காவிரி நீரின் தரத்தினை ெதாடர்ந்து பரிசோதித்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: