கோடநாடு பற்றி எடப்பாடி பழனிசாமி பேரவையில் பேசியது என்?...செய்தியாளர்கள் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மழுப்பல் பதில்

சென்னை: கோடநாடு பிரச்சனை பற்றி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இதே பிரச்சனைக்கு முன்னாள் முதலவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் எழுப்பியது பற்றிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் சென்னை பட்டினம்பாக்கத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் எடப்பாடி பழனிசாமிக்கு சங்கடம் தரவே கோடநாடு கொலை, கொள்ளை பிரச்சனை சட்டப்பேரவையில் எழுப்பப்படுவதாக குற்றம் சாட்டினார்.

இந்த பிரச்சனை பற்றி பேரவையில் விவாதித்தால் முன்னாள் முதலவர் எடப்பாடி பழனிசாமி சுதந்திரமாக செயல்பாடு முடியாது என அவர் புகார் கூறினார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்னதாக சயான் கூறியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு பதிலளித்த ஜெயக்குமார் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் தவிர சட்டப்பேரவையில் விவாதிக்க தேவையில்லை என அவர் கூறினார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நீதிமன்றத்தி நிலுவையில் இருந்தாலும் அந்த பிரச்சனையை அதிமுக மட்டும் பேரவையில் எழுப்பியதே என செய்தியாளர்களின் கேள்வி கேட்டனர். அதற்க்கு  ஜெயகுமார், இன்பதுரை மழுப்பலாக பதில் அளித்தனர்.

Related Stories: