வீட்டுவசதி துறையில் நிலுவையில் உள்ள விற்பனை பத்திரங்களை வழங்க 3 நாள் சிறப்பு முகாம்: அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

சென்னை: வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் ஆய்வில் இதுவரை கொடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள விற்பனை பத்திரங்களை உடனடியாக கொடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 1,021 விற்பனை பத்திரங்கள் உரியவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு மாவட்டம்தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி விற்பனை பத்திரங்களை கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். எனவே, விற்பனை பத்திரம் பெறாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். விற்பனை பத்திரம் பெற வருபவர்கள் அவர்களிடத்தில் உள்ள அனைத்து விதமான ஆதார ஆவணங்களை முகாமிற்கு எடுத்து வர வேண்டும். முகாம் குறித்த விவரங்களை 188-599-6060 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: