10 ஆண்டுகளில் டாஸ்மாக் முறைகேடுகளை கண்டறிய தனி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்: ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் நேற்று டாஸ்மாக்  ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் திருச்செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சட்டப்படி 8 மணி நேரம் வேலை, வார விடுமுறை, பண்டிகை விடுமுறை உள்ளிட்டவைகள் அமல்படுத்தப்படுவதில்லை. டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 26 ஆயிரம் ஊழியர்களுக்கு 18 ஆண்டுகளாக சட்டப்படியான சம்பளம் வழங்கப்படுவதில்லை. நுகர்வோர் விரும்பாத மதுவகைகள் கடைகளில் விற்பனைக்கு திணிக்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் குறிப்பாக கொள்முதலில் பெருமளவில் பணம் கைமாறுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் டாஸ்மாக் நிறுவனத்தில் பிறப்பிக்கப்பட்ட பணியிடமாறுதல் ஆணைகள் மற்றும் மீண்டும் பணி வழங்கல் ஆணைகளை ஆய்வுக்கு உட்படுத்தினால் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும். கடந்த 5 ஆண்டுகளுக்கு நிர்வாகம் 2,500 பில்லிங் இயந்திரங்கள் மற்றும் 2,500 பிரிட்ஜ் வாங்கியது. இதில் எதுவும் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளை கண்டறிய தனி விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும். இதேபோல், எங்களின் 20 அம்ச கோரிக்கையை சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றக்கோரி செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெறும். இவ்வாறு கூறினார்.

Related Stories: