நியுபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், தோனியுடன் இணைந்து நல்வாழ்வு விழிப்புணர்வு

சென்னை: நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் G.S.K.வேலு கூறியதாவது:  உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் எம்.எஸ்.தோனி கொண்டுள்ள அர்ப்பணிப்பு, ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறந்த உடல்நலத்தைப் பேண உதவும் எங்கள் அர்ப்பணிப்பை எதிரொலிப்பதாக உள்ளது.  எங்கள் சேவைகளை திறம்பட உரைக்க தோனியுடனான இந்த இணைவு பெருமளவில் உதவும். இந்நிறுவனம் துவக்கப்பட்டதில் இருந்து 4 ஆண்டுகளில், உலகின் 3 கண்டங்களில் தடம் பதித்துள்ளது. FY21-ல் ரூ.800 கோடி வருவாய் ஈட்டியது.

ஐக்கிய அரபு நாடுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் உள்ள உலகளாவிய சந்தைகளில் வளர்ச்சியை மேலும் விரிவாக்க தோனியுடனான உறவு கைகொடுப்பதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி கூறுகையில், ‘இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறப்பான, மலிவான சுகாதாரப் பாதுகாப்பு வழங்க நியூபெர்க்கின் நிர்வாகத் தலைவர்கள் கொண்டுள்ள உறுதியில் நானும் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசாரங்கள் இந்த கொரோனா காலத்தில் மிக அவசியமானது,’ என்றார்.

Related Stories: