பெட்ரோல் விலை குறைப்பால் விளைந்த நன்மை… 3 நாட்களில் 11.28 லட்சம் லிட்டர் கூடுதல் விற்பனை :நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “பெட்ரோல் விலை மீதான வரியில் ரூ.3 குறைக்கப்பட்டதால் மக்கள் நேரடியாக பயனடைந்துள்ளதை அறிய முடிகிறது. புள்ளிவிவரங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. பெட்ரோல் விலை ரூ. 3 குறைப்பு பொருளாதார நிபுணர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. விலை குறைப்புக்கு முன் தமிழ்நாட்டில் பெட்ரோல் விற்பனை ரூ. 91.18 லட்ச லிட்டராக இருந்தது.

விலை குறைப்புக்கு பின் பெட்ரோல் விற்பனை ரூ.1.03 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி 11.28 லட்சம் லிட்டர் பெட்ரோல் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. இது மக்களுக்கு மிகுந்த பயனுள்ள விலைக்குறைப்பாக மாறியிருப்பது இதன்மூலம் தெரியவருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,கடந்த 10 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்படாத பொருளாதார ஆய்வறிக்கை வரும் ஆண்டு முதல் தாக்கல் செய்யப்படும்.கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 3 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் தமிழில் மொழி பெயர்த்து மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் அவர் கூறினார்.

Related Stories: