திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை 1.76 கோடி வசூல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல்கள் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்களில் எண்ணப்பட்டதில்  1 கோடியே 76 லட்சத்து 19 ஆயிரத்து 479 வசூலானது.அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில் செயல் அலுவலர் (கூ.பொ) அன்புமணி, குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயில் உதவி ஆணையர் கண்ணதாசன், உதவி ஆணையர் திருச்செந்தூர் செல்வராஜ், ஆய்வர்கள் திருச்செந்தூர் முருகன், தூத்துக்குடி வழக்கு ஆய்வர் இசக்கி செல்வம், சிவகாசி, பதிணெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழு, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நிரந்தர உண்டியல்கள் மூலம் 1 கோடியே 73 லட்சத்து 45 ஆயிரத்து 160ம், தற்காலிக உண்டியலில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 319ம் என மொத்தம் 1 கோடியே 76 லட்சத்து 19 ஆயிரத்து 479 ரொக்கம் வசூலாகியுள்ளது. இதுபோல் தங்கம் 1,250 கிராமும், வெள்ளி 30,350 கிராமும், பித்தளை 69 ஆயிரத்து 350 கிராமும், செம்பு 23 ஆயிரத்து 190 கிராமும், தகரம் 2 ஆயிரத்து 110 கிராமும், அயல்நாட்டு நோட்டுகள் 261 எண்ணமும் கிடைத்துள்ளன.

Related Stories: