தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உருமாற்ற வைரஸ் கண்டுபிடிக்கும் ஆய்வகம் விரைவில் துவக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னை, கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் கொரோனா மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்வதற்கான மின்கல வாகனத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து அதில் பயணம் செய்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் இயக்கமாக செயல்பட்டு ஏராளமான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக எஸ்.கே.சி.எல் தனியார் நிறுவனம் 5 லட்சம் மதிப்பிலான ஒரு பேட்டரி கார் வழங்கியுள்ளது. முதலமைச்சர் அறிவித்த பன்னோக்கு மருந்துவமனை கிண்டி கிங்ஸ் வளாகத்தில் துவங்க உள்ளது.

அதற்கு இந்த பேட்டரி வாகனம் பயனுள்ளதாக இருக்கும். தொற்றா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று மருத்துவம் வழங்கப்படும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  இதுவரை 1,28,361 பேர் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு இதுவரை 39,08,250 கோவாக்சின் டோஸ் வந்துள்ளது. 36,31,540 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 4 லட்சம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி தேவைப்படுகிறது. தற்போது கோவாக்சின் முதல் தவணை யாருக்கும் செலுத்தப்படுவதில்லை. மேலும் விரைவில் உருமாற்றமடைந்த வைரஸ் கண்டுபிடிப்பு ஆய்வகம் டிஎம்எஸ் வளாகத்தில் துவங்கப்பட உள்ளது.சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு சுகாதாரத்துறையில் ஒவ்வொரு துறையாக அழைத்து பேசி காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

Related Stories: