2020-21ம் ஆண்டு வழிகாட்டு மதிப்பை வைத்து கட்டிடங்களுக்கு முத்திரை தீர்வை நிர்ணயம்: பொதுப்பணித்துறை சார்பில் பதிவுத்துறை ஐஜிக்கு கடிதம்

சென்னை: கட்டிடங்களின் மதிப்பு நிர்ணயிக்காமல் பத்திரப்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள உள்ள நிலையில் கடந்த 2020-21ம் ஆண்டுக்கான வழிகாட்டு மதிப்பை வைத்து கட்டிடங்களுக்கு முத்திரை தீர்வை நிர்ணயம் செய்ய பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்ைம தலைமை பொறியாளர் விஸ்வநாத் பதிவுத்துறை ஐஜி சிவன் அருளுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் 578 சார்பதிவளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில், நிலங்களுக்கு மட்டும் சந்தை மதிப்பு அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகிறது.

அதேநேரத்தில் கட்டிடம் இருந்தால் அதற்காகவும் தனியாக மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டன. இந்த நிலையில் ஓரே ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தற்போது வரை புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்படவில்லை. இதனால், கட்டிட மதிப்பு நிர்ணயம் செய்யாமல் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை தான் உள்ளது. இந்த நிலையில் 2020-21ம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டிடங்களின் வழிகாட்டி மதிப்பை கொண்டே கட்டணம் நிர்ணயிக்க பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத் பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில், கடந்த 2020-2021ம் ஆண்டிற்கு கட்டிடங்களை மதிப்பு நிர்ணயம் செய்து முத்திரை தீர்வைக்கு வசூலிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மதிப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் 2021-22ம் ஆண்டிற்கான கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பு தயார் செய்யப்பட்டு வருகிறது. எனவே, வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பழைய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் கட்டிடங்களுக்கான மதிப்பு நிர்ணயம் செய்து கட்டணம் வசூலிக்கலாம்  என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: