சத்துவாச்சாரியில் இளைஞர்கள் பயன்படுத்த வசதியாக 60 லட்சத்தில் கட்டிய நீச்சல் குளம் 4 ஆண்டுகளாக பூட்டியே பாழாகிறது: பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் பயன்படுத்த குறைந்த கட்டணத்தில் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் பகுதியில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அப்போதைய எம்எல்ஏ விஜய்யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 60லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறையால் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குளிக்க வசதியாக நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் முடிந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனாலும் நிச்சல் குளம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் பாழாகி வருகிறது. முன்பு இருந்து கலெக்டர் சண்முகசுந்தரம், பொதுப்பணித்துறை, மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்து, உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார். ஆனால் அதன்பின்னரும் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே 60 லட்சத்தில் கட்டி பாழாகி வரும் நீச்சல் குளத்தினை உடனடியாக பயன்பாட்டிற்கு ெகாண்டுவர கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: