கொரோனா ஊரடங்கால் நகராட்சி சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவால் விற்பனை மந்தம்

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி நகராட்சி சந்தைக்கு, கொரோனா ஊரடங்கால் மாடுகள் வரத்து குறைவாக இருந்ததுடன், கேரள வியாபாரிகள் வருகை இல்லாமல் வெறிச்சோடியது.பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தையில் ஒவ்வொரு வாரம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் சந்தை நாளின்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் வரத்து அதிகளவு இருக்கும். அதனை கேரள வியாபாரிகளே பெரும்பாலும் வாங்கி செல்கின்றனர். கடந்த மாதத்தில் மழையிருந்தாலும், கேரள வியாபாரிகள் ஓரளவு வருகையால் மாடு விற்பனை விறவிறுப்புடன் இருந்தது. ஆனால், இந்த மாதம் துவக்கத்திலிருந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாட்டால் சந்தை நாட்களில் மாடுகள் வரத்து இல்லாமல் நகராட்சி சந்தை மைதானம் வெறிச்சோடியது.

இந்த வாரத்திலும் கொரோனா ஊரடங்கு கட்டுபாடு இருந்தாதால் நேற்று  வெளிமாநில மாடுகள் கொண்டு வருவது 2வது வாரமாக நின்றது. உள்ளூர் பகுதியிலிருந்து குறைவான மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. கொரோனா கட்டுப்பாட்டால் கேரள வியாபாரிகள் வருகை இல்லாததால், உள்ளூர் வியாபாரிகளே குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் மந்த கதியில் நடைபெற்றது. இரண்டு வாரமாக கொரோனா கட்டுப்பாட்டால், மாடுகள் வரத்து மற்றும் வியாபாரிகள் வருகை மிகவும் குறைவால், கடந்த மூன்று வாரத்தில் சுமார் 3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: