ஒன்றிய அரசால் நெருக்கடியால் பொது நிதியில் ரூ.40 ஆயிரம் கோடி எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பகீர் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நிதித்துறை மற்றும் வேளாண்மைத்துறை பட்ஜெட் மீதான விவாதத்தில் அரூர் சம்பத்குமார் (அதிமுக) பேசியதாவது: வெள்ளை அறிக்கை என்பதை மாநிலத்தின் நிதி நிலைமை எந்த அடிப்படையில் இருப்பதை சுட்டிக்காட்டுவதாகும். அதை தான் இடைக்கால பட்ஜெட்டில், இந்தாண்டு கடன் சுமை ரூ.4.56 லட்சம் கோடி கடன் சுமை இருக்கிறது என்று  ஓ.பன்னீர் செல்வம் தெளிவாக சுட்டிக்காட்டினார். அப்போது, மாநிலத்தின் நிதி நிலைமை உங்களுக்கு என்னவென்று தெரியாதா. நீங்களும் தானும் இந்த பக்கம் உட்கார்ந்து இருந்தீர்கள். அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்:  . உலக வங்கி, ஜைகா, ஏடிபி உட்பட பல பன்னாட்டு நிறுவனங்களிடம் கடன் வாங்கினால் அவர்கள் தமிழக அரசிடம் ஒப்பந்தம் வாங்க மாட்டார்கள்.

அவர்கள் ஒன்றிய அரசின் மூலமாக தான் போடுவார்கள். நேராக நாம் கடன் வாங்கினால் கூட ஒன்றிய அரசிடம் மூலமாக தான் தர முடியும். ஒரு அளவை மீறி வெளியில் கடன் வாங்க முயற்சித்தால் ஒன்றிய அரசு நிறுத்தி விடுவார்கள். எனவே, இந்த ரூ.40 ஆயிரம் கோடி எங்கே எடுக்கப்பட்டது என்று பார்த்தோம். பொது நிதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. 2016-21 வரை மட்டும் பொது நிதியில் இருந்து 12.45 சதவீதம் பணம் காணாமல் போய் விட்டது. ஒன்றிய அரசு நெருக்கடி கொடுத்ததால் இப்படி ஒளிந்து எடுத்துள்ளனர்.

சம்பத்குமார்: இடைக்கால பட்ஜெட் அவையில் தான் இருந்தீர்கள். கடன் அளவு தெரியாது என்கிறீர்கள். அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்:  எங்க இருந்து பணம் எடுத்தது என்று தெரியவில்லை. எவ்வளவு கேரண்டி இருந்தது என்று தெரியவில்லை. பட்ஜெட்டை எங்களுக்கு என்ன படிக்க தெரியாதா?.

Related Stories: