தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லா இ - பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு திமுக அரசை பாராட்டிய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா!!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லா இ - பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா பாராட்டு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா, சட்டப்பேரவையில் அனைவருக்கும் கணினி வைக்கப்பட்டு இருந்ததால் பட்ஜெட் விவரங்கள் எளிமையாக  மிக விரைவில் தெரிந்துக் கொண்டதாக கூறியுள்ளார். மேலும் உறுப்பினர்கள் கற்று கொள்ள வாய்ப்பு உண்டானதாக அவர் தெரிவித்துள்ளார். இ - பட்ஜெட்டை வரவேற்கும் வேளையில் புத்தகங்களும் அச்சிடப்பட வேண்டும் என்று ராஜன் செல்லப்பா கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசு சார்பில் வழங்கப்படும் நூல்களில் 60-70% வரை உறுப்பினர்கள் எடுத்துச் செல்வதில்லை என்பதும் அது வீணாக பழைய பேப்பர் கடைக்கு செல்வதும் தெரிய வந்ததாக தெரிவித்துள்ளார். காகிதமில்லா இ - பட்ஜெட்டை உருவாக்கக் கோரி 2016ல் தான், தான் வைத்த கோரிக்கையை அப்போதைய அதிமுக அரசு ஏற்கவில்லை என்றும் தற்போது காகிதமில்லா இ - பட்ஜெட்டை உருவாக்க இருப்பதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.ஆண்டுக்கு 1,600 பட்ஜெட் பிரதிநிதிகள் அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 400 பிரதிநிதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டு கருவூலம், நூலகம், கணக்காளர் , அலுவலகம் ஆகிய முக்கியமான இடங்களுக்கு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories: