பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

* பழநி தண்டாயுதபாணி கோயில் மூலம் ஒரு புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு சித்தர்களின் அறிவாற்றலுடைய தொன்மைவாய்ந்த மருத்துவ முறையான சித்தமருத்துவம் மேம்படுத்தப்படும்.

* பயிற்சி பெற்ற ஓதுவார்கள், அர்ச்சகர்களை உருவாக்கிட ஓதுவார் மற்றும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் புதுப்பிக்கப்படும். கோயில்களின் சேவைகளை மேம்படுத்த கோயில்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. பழம்பெரும் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், பக்தர்களின் அனுபவத்தை அதிகரிப்பதற்கும் கோயில்களுக்கான பெருந்திட்டங்கள் அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன.

* சுற்றுலாத்துறைக்கு ரூ.187.59 கோடிஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: