வெற்றிகரமாக தாக்கலானது தமிழக பட்ஜெட்!: முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கின்றன. பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்த பின் தற்போது சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் பேரறிழர் அண்ணா மற்றும் பெரியார் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் மூத்த அமைச்சர் துரைமுருகன், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுப்பணித்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தமிழக பட்ஜெட்டில் புதிதாக 10 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி. வளாகத்தின் கீழ் தமிழ்நாடு ஆளில்லா விமான கழகம் உருவாக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கோடம்பாக்கம் - பூந்தமல்லி வரையிலான சேவைகள் 2025 ஜூன் மாதத்தில் தொடங்கும். மதுரை மெட்ரோ ரயில் திட்டமிட்டபடி தொடங்கப்படும் என பல்வேறு வகையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் தமிழ்நாட்டில் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை 33 சதவீதமாக உயர்த்த தமிழ்நாடு பசுமை இயக்கம் உருவாக்கப்படும் என்று முற்போக்கான தொலைநோக்கு சிந்தனையோடு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான நிதி தொகையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. திமுக அரசின் முதல் பட்ஜெட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் பேரறிழர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Related Stories: