நடிகர் விஜய்யுடன் டோனி சந்திப்பு

சென்னை: சென்னையில் நடிகர் விஜய்யை கிரிக்கெட் வீரர் டோனி சந்தித்து பேசினார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் படம், பீஸ்ட். இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் சென்னையிலுள்ள ஒரு ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. நேற்று விஜய் படப்பிடிப்பு நடக்கும் தளத்துக்கு அருகில் ஒரு விளம்பர படத்தின் ஷூட்டிங் நடந்தது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி பங்கேற்று நடித்தார். விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் அருகில் நடப்பதை அறிந்த டோனி, திடீரென்று விஜய்யை சந்திக்க பீஸ்ட் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். அவர் வருவதை அறிந்த விஜய், உடனே டோனியை வரவேற்று தனது கேரவனுக்கு அழைத்து சென்றார். அவர்கள் சிறிது நேரம் பேசினர். பிறகு டோனி விஜய்யிடம் விடைபெற்று தனது படப்பிடிப்பு தளத்துக்கு சென்றார்.

Related Stories: