ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கும் பணி கொடைக்கானலில் தீவிரம்: கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல்: கொடைக்கானலில் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட கொள்கலன் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மருத்துவமனை மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான 125 கேவிஏ திறன் கொண்ட ஜெனரேட்டர் மற்றும் இதர வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் ரத்தம் பரிசோதனை மேற்கொள்வதற்காக இயந்திரம் ஆகியவை ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன். இந்தப் பணிகளை கலெக்டர் விசாகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ள இடத்தினையும், கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா சாகச மையம் அமைக்கப்பட உள்ள இடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உட்பட துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Related Stories: