பொதுமக்கள் பாதிப்படையும் வகையில் செயல்பட்ட 3 சார்பதிவாளர்கள், உதவியாளர் சஸ்பெண்ட்: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் நடவடிக்கை

சென்னை: பொதுமக்கள் பாதிப்படையும் வகையில் செயல்பட்ட 3 சார்பதிவாளர்கள், 1 உதவியாளரை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பத்திரப்பதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உள்ளிட்ட அதிகாரிகள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பதிவுச்சட்டத்திற்கு முரணாகவும், பதிவுத்துறை தலைவரால் வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கைகளுக்கு முரணாகவும், பதிவுக்கு வரும் பொதுமக்கள் பாதிப்படையும் வகையிலும் செயல்பட்ட 3 சார்பதிவாளர்கள், 1 உதவியாளர் சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பதிவுத்துறையில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் எளிதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் அமைய பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பதிவுத்துறையில் பதிவுப்பணி தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் மீது நடவடிக்கை  எடுக்க பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை நிறுவப்பட்டு பொதுமக்களின் புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

மேலும், பதிவுத்துறை தலைவரால் போலி ஆவணப்பதிவினை தடுக்கும் நோக்கில் பல்வேறு சுற்றறிக்கைள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதிவுச்சட்டத்திற்கு முரணாகவும், பதிவுத்துறை தலைவரால் வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கைகளுக்கு முரணாகவும், பதிவுக்கு வரும் பொதுமக்கள் பாதிப்படையும் வகையிலும் செயல்பட்ட கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வரும் ராதாகிருஷ்ணன், ஒத்தகடை சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பில் உள்ள சார்பதிவாளர் கார்த்திகேயன், உதவியாளர் ஷேக் அப்துல்லா, சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பில் உள்ள சார்பதிவாளர் ஜார்ஜ் ஆகியோர் பதிவுத்துறை தலைவரால் தற்காலிக பணி நீக்கம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: