கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: கலைஞரின் 3ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் - இணையவழி -2ம் ஆண்டு மாரத்தான் முதல் பதிவை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேற்று மாலை மெரினாவில் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், தாயகம் கவி, காரம்பாக்கம் கணபதி, ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, மாவட்ட அவை தலைவர் எஸ்.குணசேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் பாலவாக்கம் விஸ்வநாதன், வாசுகி பாண்டியன், பகுதி செயலாளர்கள் துரை.கபிலன், மதியழகன், பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசன், வே.ஆனந்தம், ஏ.கே.ஆனந்த், எம்.விநாயகமூர்த்தி, சைதை சாதிக், எஸ்.ஏ.அரிகிருஷ்ணன், நாடிமுத்து மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாரத்தான் போட்டி  ஆகஸ்ட் 31  வரை நடைபெறும்.  நுழைவு கட்டணமாக ரூ.300 பெறப்படுகிறது. இந்த நிதி கொரோனா நிவாரண நிதியாக  முதலமைச்சரிடம் வழங்கப்பட உள்ளது.

Related Stories: