மயிலாடும்பாறையில் மக்களை தேடி மருத்துவத் திட்டம் துவக்கம்-கலெக்டர், எம்எல்ஏ மருந்துகளை வழங்கினர்

வருசநாடு : மயிலாடும்பாறை கிராமத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார். இதில்  ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் வீடு வீடாக சென்று மருந்து, மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை வழங்கினார். கடமலை-மயிலை ஒன்றியம் முத்தாலம்பாறை, மயிலாடும்பாறை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக நேற்று கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார். தாழையூத்து கிராமத்திற்கு சென்ற கலெக்டர் அங்கு பழங்குடியின மக்களுக்கு தலா 3 லட்சம் மதிப்பீட்டில் சோலார் விளக்குகளுடன் கூடிய 7 பசுமை வீடுகள் கட்டும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். பின்பு அங்கு வசிக்கும் பழங்குடியின பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அடுத்தபடியாக தொப்பையாபுரத்திற்கு சென்று அங்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டும் பணிகளை பார்வையிட்டார்.

இந்நிலையில் மயிலாடும்பாறையில் நடைபெற்ற ஆய்வின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் அதிக அளவு பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ்சை நிறுத்திய கலெக்டர், டிரைவர் மற்றும் கண்டக்டரை கடுமையாக எச்சரித்து அனுப்பினார். இந்நிகழ்ச்சிகளுக்கு முன்பாக மயிலாடும்பாறை கிராமத்தில் நடைபெற்ற தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் கலந்துகொண்டு வீடு வீடாக சென்று நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகரன், கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர்கள் சரவணன், திருப்பதிமுத்து, வருவாய் ஆய்வாளர் முருகன் மற்றும் திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் வக்கீல் சுப்பிரமணி, தங்கப்பாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories: