உலக தாய்ப்பால் வார விழா

செய்யூர்: சித்தாமூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், உலக தாய்ப்பால் வார விழா சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, ஞானப்பிரகாசம் ஆகியோர் தொடங்கினர். இந்த பேரணி, சித்தாமூரில் உள்ள முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலகம் வந்தது. அப்போது, குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் குறித்து எடுத்துரைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, தாய்ப்பால் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். பின்னர், தாய்மார்கள் உட்கொள்ள வேண்டிய காய்கறிகள், கீரை வகைகள், தானியங்களை கண்காட்சியில் வைத்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஆனந்தம், மேற்பார்வையாளர்கள் மலர்கொடி, சாந்தி, ரங்கநாயகி, வட்டார ஒருங்கிணைப்பாளர் கமலாம்பிகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>