செய்யாறு அருகே வேப்ப மரத்தில் பால் வடிந்தது: படையலிட்டு கிராம மக்கள் வழிபாடு

செய்யாறு:  செய்யாறு அருகே தாலிக்கால் கிராமத்தில் வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் கிராம மக்கள் பூஜை செய்தும், படையலிட்டும் வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா தாலிக்கால் கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், விவசாயி. இவரது வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் நேற்று திடீரென பால் வடிய தொடங்கியது.

இதைபார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர். மேலும் வேப்பமரத்தை அம்மனாக கருதி சேலை கட்டி, மாலை அணிவித்து பூஜை செய்தனர். அதோடு பொங்கல் வைத்து படையலிட்டனர்.இந்த தகவல் சிறிது நேரத்தில் கிராமம் முழுவதம் பரவியது. இதனால் கிராம மக்கள் வேப்ப மரத்தின் அருகே குவிந்து கற்பூரம் ஏற்றி வணங்கினர். இதனால் நேற்று அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: