அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 2,060 நெல் மூட்டைகள் கொள்முதல்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 2,060 நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த அம்மூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்திற்கு லாலாப்பேட்டை, சோளிங்கர், பொன்னை, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜா, ஆற்காடு, விளாப்பாக்கம், திமிரி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் அவைகளை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பல்வேறு ரக நெல் மூட்டைகளை டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்டவைகள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்து பணத்தை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று மட்டும் விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த 2,060 நெல் மூட்டைகள் கொள்முதல் ெசய்யப்பட்டது. நேற்று 75 கிலோ ஏடிடி 37 வகை நெல் குறைந்தபட்ச விலை ₹759க்கும், அதிகபட்சம் ₹953க்கும், கோ 45 வகை குறைந்தபட்சம் ₹891க்கும்,அதிகபட்சம் ₹916க்கும்.

கோ 51 வகை குறைந்தபட்சம் ₹769க்கும், அதிகபட்சம் ₹932க்கும், ‌‌சோனா வகை குறைந்த பட்ச விலை ₹1082க்கும், அதிகபட்சம் ₹1,292க்கும், ஐஆர் 50 குறைந்தபட்சம் ₹808க்கும், அதிகபட்சம் ₹869க்கும், சூப்பர் பொன்னி நெல் வகை குறைந்தபட்சம் ₹859க்கும், அதிகபட்சம் ₹916க்கும் விற்பனை செய்யப்பட்டது என்று விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பழனி தெரிவித்தார்.

Related Stories: