ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விதித்த தடை ரத்து...புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை..: ஐகோர்ட்

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட தடையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.

அதனை தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறைத்தண்டனையும் அளிக்கப்படும். மேலும் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனப் பொறுப்பாளர்கள் ரம்மி விளையாட்டரங்கம் வைத்திருந்தால் ரூ. 10 ஆயிரம் அபராதத் தொகையும் 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஆன்லைன் விளையாட்டுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது. எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தடையை ரத்து செய்வதாக ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து, வேண்டும் என்றால் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் ஐகோர்ட் கூறியுள்ளது.

Related Stories:

>