சங்கம் வளர்த்த மதுரையில் கலைஞர் நூலகம் அமைவது அதிமுகவுக்கு கசக்கிறது!: அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்..!!

சென்னை: சங்கம் வளர்த்த மதுரையில் கலைஞர் நூலகம் அமைவது அதிமுகவுக்கு கசக்கிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழ்நாட்டு மக்கள் கனவை நனவாக்க, இளைஞர் சமுதாயம் ஏற்றம் பெற மதுரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பெயரில் சர்வதேச தரத்தில் நூலகம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு அதிமுக இரட்டை தலைக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மதுரைக்கு ஒரு நல்ல திட்டம் வருவதை அனுமதிப்பதா? என்று அவர்கள் வீம்புக்கு மல்லுக்கு நிற்பதாக எ.வ.வேலு கூறியுள்ளார். கலைஞர் நூலகம் அமைவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலுடன் கற்பனை கதைகளை கட்டவிழ்த்து அதிமுக எப்போதுமே அழிவு சக்தி தான் என்று மீண்டும் நாட்டு மக்களுக்கு உணர்த்தி உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். கலைஞர் நூலகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் குறித்து வதந்தி கிளப்பிய போதே பொதுப்பணித்துறை ஆவணங்களை பரிசீலித்ததில், நூலகம் அமையவுள்ள கட்டிடமானது 1912ல் பூமி பூஜை செய்யப்பட்டு 1913ல் கட்டி முடிக்கப்பட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். க

ர்னல் ஜான் பென்னிகுக் மறைந்த காலத்திற்கு பின் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் இக்கட்டிடத்தில் அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தெளிவாக தெரிவித்து அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது என்று அமைச்சர் விளக்கியுள்ளதாக எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ஆகவே கதை அளந்து கலைஞர் நூலகத்தை தடுத்துவிடலாம் என்று கனவிலும் நினைக்க வேண்டாம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: