புழல் ஏரியில் மதகு ஷட்டர்கள் சீரமைப்பு

புழல்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரியும் ஒன்று. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி ஆகும். தற்போது, இந்த ஏரியில், தண்ணீர் இருப்பு 2593 மில்லியன் கன அடியாக உள்ளது. இதிலிருந்து, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 156 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், பருவமழை தொடர்ந்து இப்பகுதியில் பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கினால், ஏரியின் நீர்மட்டம் உயரும். எனவே, உபரிநீர் திறந்து விடப்படும் சூழ்நிலை உருவாகும். இதற்காக, மதகு பகுதியில் உள்ள ஷட்டர்களை புதுப்பிக்கும் பணியில், செங்குன்றம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். ஏரியில் நீர்மட்டம் நன்றாக உள்ளதால், சென்னை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: