திருப்போரூர் ஒன்றியம், பேரூராட்சியில் கொரோனா தொற்று மீண்டும் பரவும் அபாயம்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், பேரூராட்சியில் கொரோனா தொற்று மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்போரூர் ஒன்றியத்தில் கடந்த கொரோனா 2வது அலையின்போது 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதையொட்டி, கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகளால் தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. சமீபத்தில் திருப்போரூர் ஒன்றியத்தில் யாருக்கும் கொரோனா இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், திருப்போரூர் ஒன்றியத்தில், கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டு வருகிறது. திருப்போரூர் ஒன்றியத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 53 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று திருப்போரூர் பேரூராட்சியில் 6 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. செயல் அலுவலர் (பொறுப்பு) கேசவன் தலைமையில் ஊழியர்கள் வாகன ஓட்டிகள், கடை வியாபாரிகள், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து ரூ.3600 அபராதம் வசூலித்தனர்.

Related Stories: