குருப் 1 முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஜனவரி 3ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 1 பணிகளுக்கான முதல்நிலை தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களுள், தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் வருகிற 5ம் தேதி வெளியிடப்படவுள்ள உரிய படிவத்தில், 16ம் தேதி முதல் அடுத்த மாதம் 16ம் தேதி வரை (வேலை நாட்களில்) ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அதாவது, பள்ளி முதல் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரையும், மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: