திருவள்ளூர். விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்பட 11 இடங்களில் புதிதாக துவக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவு

மதுரை: புதிய மருத்துவக்கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கையை துவக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, மாடக்குளத்தைச் சேர்ந்த வாசுதேவா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர், அரியலூர், கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2020-21ம் கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடக்குமென தமிழக அரசு கூறியிருந்தது.

கடந்தாண்டுக்கான கலந்தாய்விற்கான பட்டியலில் புதிய மருத்துவக்கல்லூரிகள் சேர்க்கப்படவில்லை. இவற்றை சேர்த்தால் மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரிப்பதுடன், அதிக சீட்டுகளும் கிடைக்கும். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூடுதலாக பயனடைவர். எனவே, 2020-21ம் ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ கலந்தாய்வில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகளை சேர்க்க உத்தரவிட வேண்டும்’’’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘மனுதாரர் முன்கூட்டியே மனு செய்துள்ளார். இருந்தாலும், இந்த மாவட்ட மருத்துவக்கல்லூரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், ஆய்வக வசதி உள்ளிட்டவற்றை விரைவாக மேற்கொள்ள வேண்டும். நடப்பு 2021-22ம் கல்வி ஆண்டிலேயே நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மாணவர் சேர்க்ைகயை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: