சமூகநீதியை காப்பதில் மிகப்பெரிய சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் பாராட்டு

சென்னை:  27 சதவீத இடஒதுக்கீட்டை வெற்றிகரமாக பெற்றுத் தந்ததற்காக பல்வேறு மருத்துவ சங்கத்தினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர்கள் ரவீந்திரநாத், சாந்தி, ரமேஷ், ஹரிகணேஷ், அரசு அனைத்து டாக்டர்கள் சங்கம் டாக்டர்கள் சுந்தரேசன், சக்திராஜன், சந்திரபோஸ் அம்பேத்கர் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் டாக்டர் கீர்த்திவர்மன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் சமூக  சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைவர் கலைஞரின் வழியை பின்பற்றி சமூகநீதியை  காப்பதில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்’’ என்றார்.

பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழபாலின சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136வது பிறந்தநாளில் பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிற்போக்குத்தனங்களும் பெண்ணடிமைத்தனமும் முடைநாற்றம் வீசிக் கொண்டிருந்த காலத்தில் புரட்சிக்கனலாய் வாழ்ந்த இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136வது பிறந்தநாள். பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்’ எனத்தெரிவித்துள்ளார்.

Related Stories: