பந்தலூர் அருகே சாலையோர முட்புதர்கள் அகற்றம்

பந்தலூர் :  பந்தலூர் அருகே பெருங்கரை கொற்றிக்கல் பழங்குடியினர் கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், கடந்த மார்ச் 25ம் தேதி இரண்டு பேரை காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இப்பகுதிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் மண்டி கிடப்பதால் யானை நடமாட்டம் தெரிவதில்லை. அதனால்தான், யானை- மனித மோதலாகி உயிரிழப்பு ஏற்பட்டது. எனவே, அப்பகுதிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.

தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கூடலூர் வன கோட்ட அலுவலர் கொம்மு ஓங்காரம் உத்தரவின்பேரில் பிதர்காடு ரேஞ்சர் மனோகரன் மேற்பார்வையில் சாலையயோர முட்புதர்கள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. வனக்காப்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் வனப்பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். வனத்துறை இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: