துபாய் சர்வதேச நிதி மையத்தில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் மீண்டும் இணைந்துள்ளது

சென்னை: ஆபரண சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள உலகின் மாபெரும் நிறுவனங்களுள் ஒன்றான மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு அங்கமான மலபார் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் மீண்டும் துபாய் சர்வதேச நிதி மையத்தில் சேர்ந்துவிட்டதையும், சர்வதேச செயல்பாடுகளுக்கான தனது பங்குகளின் பதிவை நாஸ்டாக் துபாய் சிஎஸ்டியில் செய்துவிட்டதையும் அறிவித்துள்ளது. இந்த முக்கிய நடவடிக்கையானது முதலீட்டாளர்களுடனான மலபார் குழுமத்தின் தொடர்பை வலுப்படுத்துவதுடன் நிறுவனத்தின் கார்ப்பரேட் செயல்பாடுகளில் ஒளிவு மறைவற்ற சீரான, திறன்மிக்க, பாதுகாப்பான தீர்வுகள் கிடைக்கவும் வழி செய்கிறது. இந்நிகழ்வை கொண்டாடும் வகையில் மலபார் குழுமத்தின் சேர்மன் எம்.பி.அகமது, நாஸ்டாக் துபாய் பங்கு சந்தையின் முதல் மணியை ஒலிக்க செய்தார். இதில் துபாய் சர்வதேச நிதி மையத்தின் ஆளுநரும், துபாய் நிதி சந்தையின் சேர்மனுமான எஸ்ஸா காஜிம், மலபார் குழுமத்தின் இணை சேர்மன் பி.ஏ.இப்ராஹீம் ஹாஜி, நாஸ்டாக் துபாயின் சிஇஓ மற்றும் டிஎப்எம்இன் துணை சிஇஓவுமான ஹமீத் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: