விண்வெளியில் நடந்த காமா கதிர் வெடிப்பு அபூர்வ காட்சி பதிவு

புதுடெல்லி: விண்வெளியில் பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட தூரத்தில், காமா கதிர்கள் வெடிக்கும் சம்பவம் மிகவும் அபூர்வமாக நடக்கும். இது, மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த வெடிப்பு குறிப்பிட்ட சில நொடிகள் மட்டுமே நீடிக்கும். இந்த நேரத்தின் அடிப்படையில், நீண்ட நேர வெடிப்பு, குறைந்த நேர வெடிப்பு என அவை அழைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம்  தேதி இதுபோன்று காமா கதிர்கள் வெடித்த காட்சியை நாசாவின் ‘பெர்மி காமா கதிர் விண்வெளி டெலஸ்கோப்’ மூலமாக  விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த குழுவில் சில இந்திய விஞ்ஞானிகளும் இடம் பெற்றுள்ளனர். இந்த வெடிப்பு  இரண்டு நொடிகள் மட்டுமே நீடித்துள்ளது. இருப்பினும், விண்வெளியில் காமா கதிர்கள் வெடிப்பதற்கான காரணத்தை கண்டறிய, இந்த கண்டுபிடிப்பு உதவியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: