×

வல்லூரில் Torrent gas நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள சிட்டி கேட் நிலையம், 25 CNG நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (27.7.2021) தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எண்ணூர் அருகே உள்ள வல்லூரில் Torrent gas நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள சிட்டி கேட் நிலையம் மற்றும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 CNG நிலையங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். Torrent gas நிறுவனம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எரிவாயு விநியோகத் திட்டத்திற்காக, 5,000 கோடி ரூபாய்  முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும், இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் அருகே உள்ள வல்லூரில் City gate station(mother station) 1.4 ஏக்கரில் Torrent gas நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம்  33 லட்சத்திற்கும் மேலான வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகம் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 25 CNG நிலையங்கள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் மேற்கொள்ளத் தயார் நிலையில் உள்ளன. வல்லூரில் உள்ள City gate நிலையத்திலிருந்து இந்த 25 CNG நிலையங்களுக்கு எரிவாயு கொண்டுவரப்பட்டு, வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக இது அமைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும். தற்போதுள்ள CNG வாகனங்களுக்கும் இது உதவியாக இருக்கும்.


Tags : City Gate Station ,Torrent Gas ,Vallur ,Chief Minister ,MK Stalin , எண்ணூர்
× RELATED எழும்பூர் ரயில் நிலையத்தில்...