×

மாதவரம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம் தீவிர பிரசாரம்

மாதவரம், ஏப்.2: மாதவரம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், மாதவரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ நேற்று சோழவரம் ஒன்றியம் நெற்குன்றத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். திறந்த ஜீப்பில் சென்று ஓரக்காடு, சோத்துப் பெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், பழைய மற்றும் புதிய எருமை வெட்டிபாளையம், தேவநேரி ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று, கடந்த 5 ஆண்டுகளில் மாதவரம் தொகுதியில் செய்யப்பட்ட தமிழக அரசின் பல்வேறு சாதனை திட்டங்களையும், தமிழக முதல்வர் கொண்டு வந்த திட்டங்களையும் எடுத்துக் கூறினார்.

மேலும், மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்கப்படும் போன்ற புதிய திட்டங்களை வாக்காளர்களிடம் எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் எஸ்.சுதர்சனத்திற்கு பெண்கள் பலரும் ஆரத்தி எடுத்து மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர். இதேபோல், ஒரக்காடு பகுதியில் தூய்மையான குடிநீர் திட்டம், பழைய எருமை வெட்டி கிராமத்தில் நீண்ட நாள் கோரிக்கையான பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக இருந்த வனத்துறை சாலையை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரமான சாலையாக அமைத்தது, அனைத்து கிராம பகுதிகளுக்கும் கான்கிரீட் மற்றும் தார் சாலை, குடிநீர், தெரு விளக்கு, பள்ளி கட்டிடங்கள், நியாய விலை கடை, புதிய டிரான்ஸ்பார்மார்கள் போன்ற ஏராளமான திட்டங்களை கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பதாக உறுதியளித்தனர். இதில், சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், மண்டல குழு தலைவர் நந்தகோபால், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர். முன்னதாக வேட்பாளர் எஸ்.சுதர்சனம் மாதவரத்தில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.

Tags : Madhavaram ,Dimuka ,S. Sudarsanam ,Thimuka ,Matawaram ,Non-Religious Progressive Alliance ,Chennai's North-East District ,
× RELATED பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை...