புதுச்சேரியில் பெட்ரோல் பங்க் வந்த இளைஞரை உயிரோடு எரித்த பாஜக நிர்வாகி கைது!: போலீசார் நடவடிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல் பங்க்கிற்கு வந்த இளைஞரை உயிரோடு எரித்த புகாரில் பாஜக நிர்வாகி மற்றும் அவருடைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ மௌரியா. மாநில பாஜக வணிக பிரிவு அமைப்பாளராக உள்ள இவர், மேட்டுப்பாளையம் சந்திப்பில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது பெட்ரோல் பங்க்கிற்கு நள்ளிரவு திருச்சியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் வந்துள்ளார். அப்போது ராஜ மௌரியா, சதீஷ்குமார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ராஜ மௌரியா தன்னுடைய சகோதரர் ராஜ வர்தன் மற்றும் நண்பர்களுடன் இணைந்து சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் சதீஷ்குமாரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்து சதீஷ்குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ராஜ மௌரியா மற்றும் அவருடைய சகோதரர் ராஜ வர்தன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் மேட்டுப்பாளையத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.

Related Stories:

>