ஊட்டி தேயிலை பூங்காவில் 10 ஆயிரம் தேயிலை நாற்று உற்பத்தி மும்முரம்-ஓரிரு நாட்களில் விற்பனைக்கு தயார்

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள தேயிலை பூங்காவில் விற்பனைக்காக 10 ஆயிரம் தேயிலை நாற்றுக்கள் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது. ஊட்டி  அருகேயுள்ள தொட்டபெட்டாவில் தேயிலை பூங்கா உள்ளது. தோட்டக்கலைத்துறையின்  கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. மேலும்,  பேரிக்காய் தோட்டங்கள் மற்றும் பல்வேறு நாற்றுக்கள் உற்பத்தி செய்யும்  நர்சரிகளும் உள்ளன. இது தவிர சுற்றுலா பயணிகள் வந்துச் செல்ல ஏற்ற  வகையில் பூங்கா அமைக்கப்பட்டள்ளது. இந்த தேயிலை பூங்காவில் பல்வேறு மலர்  நாற்றுக்கள், மரக்கன்றுகள் மற்றும் தேயிலை நாற்றுகள் உற்பத்தி செய்வது  வழக்கம்.

தற்போது இப்பூங்காவில் 10 ஆயிரம் தேயிலை நாற்றுக்குள்  உற்பத்தி செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நர்சரியில்  ஊழியர்கள் தேயிலை நாற்றுக்களை உற்பத்தி செய்து வருகின்றனர். ஓரிரு  நாட்களில் இந்த நாற்று விற்பனைக்கு தயாராகிவிடும். இந்த நாற்றுக்களை  விவசாயிகள் குறைந்த விலையில் வாங்கிச் சென்று தங்களது தோட்டங்களில் நடவு  செய்யலாம் என தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: