புனேயிலிருந்து தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு வருகை

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 34 பார்சல்களில் மகராஷ்டிரா மாநிலம் புனேயிலிருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தது. ஒன்றிய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு நேற்று, மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்து கிடங்கிலிருந்து 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது. அந்த 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 34 பார்சல்களை புனேவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ விமானத்தில் ஏற்றப்பட்டு, நேற்று மாலை 3.30 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தன. உடனடியாக சென்னை விமானநிலைய லோடா்கள் தடுப்பூசி பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினர். அதன்பின்பு அவை தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் குளிர்சாதன வாகனங்களில் ஏற்றி, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: