பக்தர்கள் இடைத் தரகர்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்

திருமலை: திருப்பதி சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்வதாக கூறி பணம் வசூலித்ததாக சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சென்னையைச் சேர்ந்த ரேவதி டிராவல்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை போலீஸ் சென்னையைச் சேர்ந்த ரேவதி டிராவல்ஸ் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. ரூ.300 டிக்கெட், கல்யாண உற்சவ டிக்கெட் பெற்றுத் தருவதாக கூறி அதிக பணம் வசூலித்ததாக ரேவதி டிராவல்ஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில்; பக்தர்கள் www.tirupathibalaji.ap.govt.in என்ற இணையதளத்தில் மட்டும் முன்பதிவு செய்ய வேண்டும். பக்தர்கள் இடைத் தரகர்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம். அதிக பணம் வசூலித்து டிக்கெட் முன்பதிவு செய்யும் டிராவல் ஏஜென்சிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Related Stories: