ரேஷன் கடையில் வெளிநபர் இருந்தால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: ரேஷன் கடைகளில் வெளிநபர்கள் யாராவது இருந்தால் கடை விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நியாயவிலை கடை பணியாளர்கள் ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்க கூடாது. அப்படி இருந்தால் அவர்களை அருகில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு பணிமாற்றம் செய்ய வேண்டும்.நியாயவிலை கடைகளில் சம்பந்தப்பட்ட பணியாளர்களை தவிர வெளிநபர்கள் யாரும் இருக்க கூடாது. இதுபற்றி புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட நியாயவிலை கடை விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: