தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மின் கட்டணத்தை மாதம் ஒரு முறை கணக்கிட வேண்டும்: கடந்த 5 ஆண்டுகள் மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி கோரிக்கை

சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல், மதுரை உட்பட பல மாவட்டங்களில், பல மணி நேரம் பகலிலும், இரவிலும் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். மேலும், தமிழகத்தில் மின் கட்டணம் தற்போது 2 முதல் 3 மடங்கு வரை அதிகமாக வசூலிக்கப்படுவதுடன், டெபாசிட் தொகையும் செலுத்தச் சொல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் உரிய வருமானம் இன்றி தவித்து வரும் சூழ்நிலையில், இதுபோன்ற பொருளாதார சுமையை ஏற்படுத்துவது, மேலும் தமிழக மக்களை பாதிப்படைய செய்துள்ளது.

மின்சார வாரியத்தின் இத்தகைய செயல்களை வன்மையாக கண்டிப்பதுடன், உரிய கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும். மாதம் ஒரு முறை மின்சாரம் கணக்கெடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல், மாதந்தோறும் மீட்டர் ரீடிங் எடுக்கும் வகையில் மின்சார வாரியத்திற்கு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகள் மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி, இது குறித்து பொதுமக்கள் அப்போது கேள்விகள் கேட்டு, போராட்டம் நடத்தியபோது அமைதியாக இருந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 2 மாதத்தில் அவர் செய்யாத வேலைகளுக்கான கோரிக்கையை இப்போது எழுப்பியுள்ளார் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Related Stories: